338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நேற்று (அக்டோபர் 21) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றிபெறுவது கடினம் என்றே கருத்துக்கணிப்புகள் கூறின.
வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து மாலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அந்நாட்டின் தேர்தல் ஆணைய தளத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து குறைவான வாக்கு வித்தியாசமுடைய தொகுதிகளில் மீண்டும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும்.
கனடா தேர்தல் இணையதளத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை வெளியிடப்பட்ட முதன்மை முடிவுகளின்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களைப் பெறத் தவறியதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியுடன் (24) இணைந்து ஆட்சியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா தேப்தல் 2019 கட்சி | வெற்றி பெற்ற இடங்கள் |
லிபரல் கட்சி | 157 |
கன்சர்வேட்டிவ் கட்சி | 121 |
பிளாக் கியூபாகோயிஸ் | 32 |
புதிய ஜனநாயகக் கட்சி | 24 |
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 இடங்களைப் பெற்று ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பயத்தைக் காட்டிய 300 எலிகள்... பதறிப்போன இளம்பெண்!