தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அலுவலகத்தில் விளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் காணொலி வாயிலாக எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு, 1988ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
'கனேடிய திருவிழாவாக மாறும் தீபாவளி' விளக்கை ஏற்றி கொண்டாடிய பிரதமர்! - ஒட்டாவா இந்தியாவின் உயர் ஆணையர் அஜய் பிசாரியா
ஒட்டாவா: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காணொலி வாயிலாக விளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்துக்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ustin
இந்நிகழ்வில் ஆன்லைனில் பங்கேற்ற ஒட்டாவா இந்தியாவின் உயர் ஆணையர் அஜய் பிசாரியா பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது மட்டுமின்றி தற்போது, தீபாவளி கனேடிய திருவிழாவாக மாறியுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.