தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொலம்பியா மாகாண தலைமை நீதிபதியாக இந்தியர் நியமனம் - ஸ்ரீனிவசான் தலைமை நீதிபதி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலம்பியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Srinivasan, ஸ்ரீ ஸ்ரீனிசாவன்
Sri Srinivasan

By

Published : Feb 19, 2020, 3:04 PM IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்க நீதிபதி ஸ்ரீ ஸ்ரீனிவாசன் (52). இவர், தற்போது அந்நாட்டின் கொலம்பியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அடுத்தப்படியாக இந்தப் பதவி பார்க்கப்படுகிறது.

ஸ்ரீனிவாசனை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக அந்நாட்டு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இரண்டு முறை பரிந்துரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலம் சத்தீஸ்கரில் பிறந்த ஸ்ரீனிவாசன், அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் தன் குழந்தைப் பருவத்தை கழித்தார். புகழ்பெற்ற ஸ்டான்ஸ்ஃபோர்ட் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த இவர், ஜே.ஹார்வி வில்கின்சன் என்ற நீதிபதியிடம் பயிற்சி பெற்று படிப்படியாக உயர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சட்டம் குறித்து ஹார்வர்டு சட்டக் கல்லூரியிலும் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியிலும் ஸ்ரீனிவாசன் பாடம் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : 'பெரிய டீல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்' - ட்ரம்ப் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details