பிரேசில் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், பிரேசிலில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டுள்ளது. விதியை மீறி சுற்றுபவர்களிடம் அபராத தொகையாக 390 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது.
அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - பிரேசில் நீதிமன்றம் உத்தரவு! - பிரேசில் அதிபர் முகக்கவசம் அணிவது கட்டாயம்
சாவ் பாலோ: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பொதுவெளியில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பொது வெளியில் முகக்கவசம் இல்லாமல் மக்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசின் விதியை முக்கிய நபரே கடைப்பிடிக்காமல் இருப்பது தவறு என பலர் சுட்டிக்காட்டினர்.
இதுகுறித்து விசாரித்த பிரேசில் நீதிபதி ரெனாடோ கோயல்ஹோ பொரெல்லி, அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனா வைரசின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுகிறார். முகக்கவசம் அணிவதும், தகுந்த இடைவேளியை பின்பற்றுவதும் அவசியம். எனவே, அதிபர் போல்சனாரோ பொதுவெளிக்கு சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டார்.