தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வீ சாட் தடை! அமெரிக்க நீதிமன்றம் கூறுவது என்ன? - Wechat ban in USA

வாஷிங்டன்: வீ சாட் செயலிக்குத் தடை விதிக்கப்படுவது சுதந்திர பேச்சு உரிமையை மறுக்கும் வகையில் இருப்பதால், அச்செயலிக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள தடைகளை தாமதப்படுத்த நீதிபதி ஒப்புக்கொண்டார்.

WeChat
WeChat

By

Published : Sep 21, 2020, 1:01 PM IST

இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி, மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது.

இந்தியாவின் தடை உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியானது. இவ்விரு செயலிகளையும் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அந்நாட்டில் இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அரசு அறிவித்தது.

இந்நிலையில், டிக்டாக் செயலியை வாங்க ஆரக்கிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக அதிபர் ட்ரம்ப்பும் தெரிவித்திருந்தார். ட்ரம்ப்பின் ஆதரவு காரணமாக செயலிகளை விற்பனை செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 20இல் இருந்து செப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வீசாட் செயலியை பயன்படுத்துபவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில் வீ சாட் செயலி தடை விதிக்கப்படால், அது தங்களை மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை பாதிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக் அரசு அரசியலமைப்பு உறுதி செய்யப்படுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

வீ சாட் பயனாளர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத மாற்று தளங்களில் சுதந்திரமாக பேசிக்கொள்ளலாம் என்பதால், இது சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்தாது என்று அமெரிக்க அரசு வாதிட்டது.

இருப்பினும், அரசு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வீ சாட் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார். மேலும், வீ சாட் செயலிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தாமதப்படுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க:ஏப்ரல் 2021-க்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி...!

ABOUT THE AUTHOR

...view details