வெனிசூலாவில் பொருளாதார நெருக்கடி ஏற்ட்டதையடுத்து அதிபர் மடூரோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ, தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.
இதனையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் குவாய்டோவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, மடூரோ பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனை புறக்கணித்த மடூரோ, வெனிசூலாவுக்கு கொண்டுவரப்பட்ட மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தினார்.
இத்தகைய சூழலில் வெனிசூலாவில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என குவாய்டோ வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மடூரோ அதிபராக தான் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, வெனிசூலாவின் சூழல் குறித்து தென் அமெரிக்காவின் மற்ற நாடுகளுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் குவாய்டோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
இதற்கிடையே, ஜூவான் குவாய்டோவின் தலைமை பாதுகாவலர் ராபர்டோ மர்ரேரோ, பயங்கரவாத தாக்குதலை தூண்டும் வகையில் செயல்படுவதாக கைது செய்யப்பட்டுள்ளர்.
இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அந்நாட்டு உள் துறை அமைச்சர் நெஸ்டர் ரெவர்வால், "பயங்கரவாத தாக்குதலை தூண்டும்வகையில் செயல்பட்டு ராபர்டோ செயல்பட்டுவருகிறார். வீட்டிலிருந்து வெளிநாட்டு பணம் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில், ராபர்டோ மர்ரேரோ கைதுக்கு அமெரிக்கா வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.