தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வைரஸ் பரவலைக் கண்காணிக்கும் முயற்சியில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்!

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தற்போதுள்ள கரோனா வைரஸ் மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதைக் கண்டறிவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க பிற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது.

johns-hopkins-varsity-joins-hand-to-build-new-tools-t-understand-asymptomatic-spread-of-covid-19
johns-hopkins-varsity-joins-hand-to-build-new-tools-t-understand-asymptomatic-spread-of-covid-19

By

Published : Jun 20, 2020, 3:49 AM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரசுக்கு இதுவரை பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும் காரணத்தால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தற்போதுள்ள கரோனா வைரஸ் மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள் எவ்வாறு பரவுகின்றன?, ஏன் பரவுகின்றன? என்பதைக் கண்டறிவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க உலகின் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் கார்ட்னர் கூறுகையில், "தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?, அவை ஏன் மக்களை வித்தியாசமாகப் பாதிக்கின்றன? என்பன பற்றிய புரிதலை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்காக, கோவிட்-19 பரவுதல் மற்றும் பரவும் அபாயத்தை விளக்குவதற்குப் புதிய வழிமுறைகளை உருவாக்கவோம். அதேசமயம் பிற வைரஸ்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதைக் கண்காணிக்க, மரபியல், இயக்கம், காலநிலை, நிலப் பயன்பாடு, மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், தொற்றுநோயியல் தரவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கணக்கிட்டு வருகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சிவில் மற்றும் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பேராசிரியர் கார்ட்னர், பேராசிரியர் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து உலகப் புகழ்பெற்ற கோவிட்-19 கண்காணிப்பு வரைபடத்தை உருவாக்கியுள்ளார். அந்தத் தரவைப் பயன்படுத்தி வைரசின் மரபணு வரிசையில் சிறிய மாற்றங்களைக் காண பயன்படுத்துகின்றனர். இது வைரஸ் எவ்வாறு ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது என்பதைக் கணக்கிட உதவும்.

ABOUT THE AUTHOR

...view details