தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: ஜோ பிடன் முன்னிலை... ஆனால்? - அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போதைய செய்தி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் ஜோ பிடன் முன்னணியில் இருந்தாலும், ட்ரம்பிற்கும் அவருக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் குறைந்து வருகிறது.

Joe Biden's lead over Trump
Joe Biden's lead over Trump

By

Published : Aug 30, 2020, 2:41 PM IST

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் 77 வயதாகும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.

இந்நிலையில், தி ஹில் என்ற நிறுவனம் அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பில், ஜோ பிடன் 50 விழுக்காடு வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். ட்ரம்ப் 44 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெறுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு விழுக்காட்டினர் வாக்களிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பில், ஆறு விழுக்காடு வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னணியில் இருக்கிறார். அதேபோல், கடந்த வாரம் நடைபெற்ற குடியரசு கட்சி மாநாட்டிற்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 10 விழுக்காடு முன்னணியில் பிடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசு கட்சியின் மாநாடு, ட்ரம்ப்பின் ஆதரவை புறநகர்ப் பகுதிகளில் அதிகரித்துள்ளதாகவும், அதேபோல் வெள்ளை இன மக்களிடையே ட்ரம்ப்பின் ஆதரவு பெருகியுள்ளதாகவும் தி ஹில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கமலா அதிபராக தகுதியற்றவர்' - ட்ரம்ப் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details