வாஷிங்டன்:அமெரிக்காவின் டைம் நாளிதழ் 1927ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நபர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவித்து வருகிறது. உலக அளவில் அதிகம் பேசப்பட்ட, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் இதில் தேர்வு செய்யப்படுவர்.
அந்தவகையில், 2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா வரலாற்றினை மாற்றியவர்கள் எனப் புகழாரம் சூட்டி அவர்களது பெயர் நாளிதழில் இடம்பெற்றுள்ளது.