தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்! - தீபாவளி வாழ்த்து

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Joe Biden, Kamala Harris
Joe Biden, Kamala Harris

By

Published : Nov 15, 2020, 4:49 AM IST

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் புதிய அதிபர் மற்றும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் தங்களது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அனைத்து இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் ஆகியோருக்கு எனது இதயப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டு உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையும் அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள். இந்தத் திருநாளை அனைவரும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details