தெற்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள புனித ஷெப்பர்ட் கத்தோலிக்க தேவாலயத்தில் முற்றத்தில் உள்ள இயேசுநாதர் சிலையை சில அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் இயேசுநாதர் சிலையின் தலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் நடந்திருக்கக் கூடும் என தேவாலயத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய தேவாலய செய்தி தொடர்பாளர் மேரி ரோஸ் அகஸ்டா, "இது தேவாலயத்தின் சொத்து மட்டுமல்ல, இது புனிதமானது. சிலையின் மீதான தாக்குதல் புதன்கிழமை (ஜூலை15) காலை எட்டு மணிக்கு முன்னதாக நடைபெற்று இருக்கக்கூடும்.