இந்தியாவின் முக்கிய அண்டை நாடான மியான்மரில் கடந்த ஒன்றாம் தேதி முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அந்நாட்டின் அரசை அதிரடியாக கைப்பற்றிய மியான்மர் ராணுவம், ஓராண்டு காலத்திற்கு ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தியது.
மேலும், அந்நாட்டின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூயி, அதிபர் வின் மின்ட் உள்ளிட்ட அரசுத் தலைவர்கள் அனைவரையும் ராணுவம் கைதுசெய்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படும் நிலையில், இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.