வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே.27) அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐந்து நாள் பயணத்திட்டத்தில் முதல் நாளான இன்று அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் சென்றடைந்த ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிலங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலைவன் ஆகியரோ சந்திக்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு கொள்கை உறவு, சர்வதேச அரசியல் சூழல், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள், வர்த்தக ஒப்பந்தங்கள், காலநிலை மாற்றம், பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.