தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

#CanadaElection2019 கிங் மேக்கராக உருவெடுத்த இந்திய - கனடா அரசியல்வாதி

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் தற்போது கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

Jagmeet Singh

By

Published : Oct 23, 2019, 11:07 PM IST

மொத்தம் 338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களையும் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் பிளாக் கியூபாகோயிஸ் கட்சி 32 இடங்களையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 24 இடங்களையும் கைப்பற்றியிருந்தது.

பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களை எந்தக் கட்சியும் பெறாத நிலையில் ஜக்மீத் சிங் தற்போது கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இடது சிந்தனை சார்புக் கட்சியான ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற(44) இடங்களைவிட தற்போது பெற்ற எண்ணிக்கை குறைவுதான் என்றபோதிலும் அவருடன் கூட்டணி அமைத்து மைனாரிட்டி ஆட்சியை அமைக்கவுள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

இதுகுறித்து பேசிய ஜக்மீத் சிங், "ட்ரூடோ இப்போது மைனாரிட்டி அரசாங்கத்தை அமைக்கவுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, நாம் இருவரும் சேர்ந்தே பணியாற்றவேண்டும் பருவநிலை மாற்றம் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் தேவை. இத்தேசத்து மக்கள் வாழும் சிறந்த இடமாகக் கனடாவை நாம் மாற்றவேண்டும். இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாக இருக்கவேண்டும் பணக்காரர்களுக்கான அரசாக அல்ல" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனடா நாடாளுமன்றத்தில் 19 இந்தியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details