உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில், மோடி தலைமையிலான பாஜக 350 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இவான்கா! - இவான்கா
வாஷிங்டன்: மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் மோடிக்கு, அமெரிக்க அதிபரின் மகளான இவான்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவான்கா
இதனையடுத்து, பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா, தனது வாழத்துக்களை இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மக்களுக்கு மிக சிறந்த நேரம் வரவுள்ளதாகவும் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.