தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது 'ஐஎஸ்' அமைப்பு - isis leader killed.

பெய்ரூட்: அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் தங்கள் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

isis

By

Published : Nov 1, 2019, 10:19 AM IST

Updated : Nov 3, 2019, 5:17 PM IST

அமெரிக்க பாதுகாப்புப் படையால் தங்கள் தலைவர் ’அபுபக்கர் அல் பாக்தாதி’ கொல்லப்பட்டதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான ’அமக்’ கேட்பொலி (ஆடியோ) வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.

பாக்தாதி கொல்லப்பட்டதையடுத்து புதிய தலைவராக ’இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி’ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிரியாவில் உள்ள சன்னி முஸ்லீம் குழுவின் செய்தித் தொடர்பாளர் அபு அல் ஹசன் அல் முஹாஜீர் உறுதிபடுத்தியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அன்று ஐஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பாக்தாதியை வடமேற்கு சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள பரிஷா என்ற கிராமத்தில் கொன்றனர்.

முன்னதாக இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்திருந்தார். அத்துடன் பாக்தாதியை கொல்ல உதவிய மோப்ப நாயின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க:2 பயங்கரவாதிகள் பற்றிய தகவலுக்கு ரூ.15 லட்சம் அறிவித்த காஷ்மீர் காவல் துறை!

Last Updated : Nov 3, 2019, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details