உலகின் 20% எண்ணெய் தேவைகளை பூர்த்திசெய்யும், ஹார்முஸ் ஜலசந்தில் ஈரான் தனது விமானம் தாங்கிய கப்பலை நிறுத்தியுள்ளதை, ஈரானிய அரசு ஊடகங்களும் அரசு உயர் அலுவலர்களும் இன்னும் ஒப்பு கொள்ளவில்லை.
இதுதொடர்பாக மிடாஸ்ட் நீர்வழிகளில் ரோந்து செல்லும்,பஹ்ரைனை தளமாகக் கொண்ட அமெரிக்க கடற்படையின் கேள்விக்கு ஈரான் அரசு பதிலளிக்கவில்லை. அமெரிக்க கடற்படை வழக்கமாக பாரசீக வளைகுடாவிற்கு ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து நீர்வழிப்பாதையின் குறுகிய வாயிலிருந்து பயணிக்கிறது.
மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி அந்த போர் கப்பலில் 16 டெக் ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் சுமார் 200 மீட்டர் (650 அடி) நீளமும் 50 மீட்டர் (160 அடி) அகலமும் கொண்டதாக இருப்பது தெரியவந்துள்ளது.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் பிற உலக நாடுகளுடன் ஈடுபட்டுவரும் பேச்சுவார்த்தையில் சிக்கல் நிலவுகிறது. அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018 மே மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கடந்த கோடையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் சம்பவங்கள் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்தன.
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஜனவரி மூன்றாம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், கஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டார்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்டை நாடான ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.