தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சுலைமானி படுகொலை : டிரம்ப்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ஈரான்! - சர்வதேச காவல்துறை

ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில், ஈரான் அரசு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

iran-issues-arrest-warrant-for-trump-asks-interpol-to-help
iran-issues-arrest-warrant-for-trump-asks-interpol-to-help

By

Published : Jun 29, 2020, 8:40 PM IST

ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, கடந்த ஜனவரி மூன்றாம் தேதி ஆளில்லா விமானம் கொண்டு,அமெரிக்கப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈராக் - அமெரிக்க நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், பல அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லட்டனர். தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

டிரம்ப்பின் அதிபர் பதவிக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் மீதான வழக்கு நிச்சயம் தொடர்ந்து நடக்கும் என இது குறித்து வழக்கறிஞர் அந்நாட்டு அல்காஷிமர் தெரித்துள்ளார்.

இதனிடையே டிரம்ப் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் ’ரெட் அலர்ட்’ நோட்டீஸ் வழங்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை இண்டர்போல் இது குறித்து எவ்விதத் தகவல்களும் அளிக்கவில்லை.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஈரான் அரசு டிரம்ப்பிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கராச்சி பங்குச்சந்தையில் பயங்கரவாதத் தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details