உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 - 800 ரக விமானம் புதன்கிழமை காலை 176 பயணிகளுடன் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் பயனம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
ஈரான் விமான விபத்து: அமெரிக்காவை விசாரணையில் பங்கேற்க அழைப்பு! - Recent plane crash
தெஹ்ரான்: உக்ரைனுக்கு சொந்தமான விமான விபத்து விசாரணையில் அமெரிக்காவையும் பங்கேற்க ஈரான் அரசு அழைத்துள்ளது.
Iran invites US agency
இந்நிலையில், இந்த விபத்து குறித்த விசாரணையில், அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தை பங்கேற்ற ஈரான் அழைப்புவிடுத்துள்ளது. ஐக்கிய விமான சேவை அமைப்பின் விதிகளின்படி, விபத்துக்குள்ளான போயிங் 737 - 800 விமானம் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா இந்த விசாரணையில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரான் விமான விபத்தில் எனக்கு 'சந்தேகம்' உள்ளது - அதிபர் ட்ரம்ப்!