ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமீப காலங்களாகப் பதற்றம் நிலவிவருகிறது. குறிப்பாக, ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை, அமெரிக்கா ஆளில்லா விமானத்தின் மூலம் கொலை செய்ததும், அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் ஏவுகணைப் பயிற்சி செய்யும் ஈரான்! - அமெரிக்கா விமான கேரியர் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர ராணுவப் படை வளைகுடா கடற்பகுதியில் ஏவுகணைப் பயிற்சி செய்துவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![வளைகுடாவில் ஏவுகணைப் பயிற்சி செய்யும் ஈரான்! att](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:15:33:1595951133-8208389-99-8208389-1595947138670.jpg)
atat
இந்நிலையில், ஈரான் புரட்சிகர ராணுவப் படை வளைகுடா கடற்பகுதியில் ஏவுகணைப் பயிற்சிகளையும், விமானப் பயிற்சிகளையும் செய்துவருகிறது. இதனை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இது ஈரானின் பொறுப்பற்ற செயல் என அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.