தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமேசான் உரிமையாளரின் செல்போனை ஹேக் செய்த சவுதி இளவரசர்! - Saudi prince role in Jeff Bezos phone hack

அமேசான் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸின் செல்போனை சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Investigation points to Saudi prince role in Jeff Bezos phone hack
Investigation points to Saudi prince role in Jeff Bezos phone hack

By

Published : Jan 23, 2020, 3:13 PM IST

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் செல்போனை 2018ஆம் ஆண்டு ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்திதாள் தெரிவித்தது. ஹேக் செய்யப்பட்ட செல்போனிலிருந்து என்னென்ன தகவல்கள் திருடப்பட்டது என்று அறியமுடியாவிட்டாலும் ஒருசில தகவல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர் தனது சொந்த செல்போன் எண்ணிலிருந்து பெசோஸின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் பெசோஸின் செல்போனை ஹேக் செய்யும் ஒரு கோப்பை இணைத்து இளவரசர் அனுப்பியிருந்ததாகவும் செல்போனில் ஊடுருவிய அந்தக் கோப்பின் மூலம் தகவல்கள் திருடியதாகவும் டிஜிட்டல் தடயவியல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நட்பு ரீதியில் இருவரும் வாட்ஸ் ஆப் செய்திகளை பறிமாற்றம் செய்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் - வுஹான் நகருக்கு போக்குவரத்து நிறுத்திவைப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details