தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக இடக்கையாளர்கள் தினம் - இடக்கைப் பிரபலங்களைத் தெரிந்து கொள்வோம் - ஆகஸ்ட் 13

ஆகஸ்ட் 13ஆம் தேதி 'உலக இடக்கையாளர்கள் தினம்' கொண்டாடப்படும் நிலையில் உலகளவில் பிரபலமான இடக்கையாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

left hander

By

Published : Aug 13, 2019, 5:04 PM IST

இடக்கைப் பழக்கம் உலகளவில் தனித்துவம் வாய்ந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையினரால் அதிகம் தவிர்க்கப்படும் இடக்கைப் பயன்பாடு, ஒரு சிலருக்கு இயல்பான ஒன்றாக அமைந்து விடுவது ஆச்சரியமே. இந்த இடக்கையாளர்களின் தனித்துவத்தைப் போற்ற 1979ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி 'உலக இடக்கையாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், பாரக் ஒபாமா, நெப்போலியன் என உலகைப் புரட்டிப் போட்ட முக்கியப் பிரபலங்கள் இடக்கையாளர்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

இருபது இடக்கை பிரபலங்கள் :

  1. லியோனார்டோ டாவின்சி
    இத்தாலிய மேதை லியோனார்டோ டாவின்சி
  2. சச்சின் டெண்டுல்கர்
    காட் ஆஃப் கிரிக்கெட் சச்சின்
  3. பாரக் ஒபாமா
    அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் பாரக் ஒபாமா
  4. ஐசக் நியூட்டன்
    புவியீர்ப்பு விசை விதியை உலகிற்கு அளித்த ஐசக் நியூட்டன்
  5. நெப்போலியன் போனபார்ட்
    மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
  6. ஸ்டீவ் ஜாப்ஸ்
    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்
  7. மேரி க்யூரி
    நோபல் பரிசுபெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி க்யூரி
  8. சார்லி சாப்ளின்
    நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின்
  9. பிடல் கேஸ்ட்ரோ
    கியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ
  10. பில் கேட்ஸ்
    உலகப் பணக்கார்கள் பட்டியலில் முன்னணியிலுள்ள பில்கேட்ஸ்
  11. பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி
    ஹாலிவுட் தம்பதிகளாக இருந்த பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி
  12. ஜான் எஃப் கென்னடி
    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி
  13. மர்லின் மன்றோ
    ஹாலிவுட் கனவு தேவதை மர்லின் மன்றோ
  14. பீலே
    பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே
  15. வின்சன்ட் வான் கா
    ஒவிய மேதை வின்சன்ட் வான் கா
  16. மார்க் சக்கர்பெர்க்
    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்
  17. ஹென்றி போர்டு
    ஆட்டோமொபைல் துறையின் தந்தை ஹென்றி போர்டு
  18. அமிதாப் பச்சன்
    பிக் பி எனப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்
  19. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
    இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  20. அண்ணல் காந்தியடிகள்
    அண்ணல் காந்தியடிகள்

ABOUT THE AUTHOR

...view details