தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'பயங்கரவாதிகளுடன் உள்ளூர் குற்றவாளிகள் உறவு அச்சுறுதல்' - அக்பரூதின் பேச்சு - syed akbaruddin latest un speech

நியூயார்க்: சர்வதேச பயங்கரவாதிகளுடன் உள்ளூர் குற்றவாளிகள் இணைந்து செயலாற்றுவதுதான் உலகிற்கே பெரும் அச்சுறத்தலாக இருக்கிறது என்று ஐநாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூதின் தெரிவித்துள்ளார்.

அக்பரூதின்

By

Published : Nov 20, 2019, 6:34 PM IST

ஐநாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்தும் மூன்றாம் கட்ட உயர்நிலை சிறப்புக் கூட்டத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றது. அதில் 'அமைதியைப் பரப்ப ஒத்துழைப்போம்' என்ற தலைப்பில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி அண்டை நாடுகளுடன் உறவின் நிரந்தரதன்மை, அமைதி, நல்லிணக்கம், குறித்து பேசப்பட்டது.

அதில் பேசிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான சையத் அக்பரூதின்,

"ஐநா பட்டியலிட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளான ஜெய்-சி-முகமது, ஐஎஸ்ஐஎல், அல்குவைதா உள்ளிட்ட அமைப்புகள் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறத்தலாக இருந்துவருகிறது. சர்வதேச பயங்கரவாதிகளுக்கு மேலும் வலுவூட்டும் விதமாக உள்ளூரில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் இவர்களோடு கைகோர்த்து செயல்படுகின்றனர். அதன் மூலம் ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரேதமாக ஆயுத பரிவர்த்தனை, பணமோசடி ஆகியவை நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் பெருகும் சர்வதேச குற்றவாளிகள் உலகிற்கு அச்சுறத்தலாக இருக்கின்றனர்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் இணையவெளிலில் (cyberspace) இவர்கள் புரியும் குற்றங்களைக் கண்டறிவது அரசிற்கு பெரும் சவலாகவும் உள்ளது. இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத்தை ஒழிக்கும் அமைப்பு ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தலை தடுப்படுதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் வரும் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.

இதையும் படியுங்க: பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம்: இந்தியா

ABOUT THE AUTHOR

...view details