இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், தேர்தல் பரப்புரைக்குத் தேவையான நிதியை திரட்ட முடியாததால் வரும் 2020இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் இருந்தபோதும் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெறாமல் இருக்க தன்னால் முயன்றதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டவிட்டர் பக்கத்தில், "நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்" என்று நக்கலாக ட்வீட் செய்தார். ட்ரம்பின் இந்த ட்வீட்டுக்கு பதிலடியாக, "கவலைப்படாதீர்ங்கள். விசாரணையின்போது உங்களை சந்திப்போம்" என கமலா ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடவுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் உக்ரைனிடம் அதிபர் ட்ரம்ப் உதவிகேட்டதாக நாடாளுமன்ற விசாரணைக்குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்தாண்டுத் தொடக்கத்தில், 2020இல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக கருத்துகளை கூறிவரும் கமலாவுக்கு சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது, அதைத்தொடர்ந்தே அவர் தேர்தலிலிருந்து வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ட்டிரம்ப்: விசாரணை அறிக்கையில் தகவல்