தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இந்தியர் நியமனம்! - உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியாக இந்தியர்

ஜெனிவா(சுவிட்சர்லாந்து): உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இந்தியர் நியமனம்!
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இந்தியர் நியமனம்!

By

Published : Dec 8, 2020, 9:06 AM IST

Updated : Dec 8, 2020, 9:24 AM IST

உலக சுகாதார நிறுவனத்தின் அறக்கட்டளை வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிறுவப்பட உள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய, நடுத்தரப் பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அறக்கட்டளை வரும் 2023ஆம் ஆண்டு ஒரு பில்லியன்(((7,382.40 கோடி)) அமெரிக்க டாலர் நிதி திரட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த அனில் சோனி, பல அரசு, தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அனில் சோனி, வியாடிரஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ஹெச்ஐவி- பாதிக்கப்பட்டோருக்கு உதவும் மருந்தை கண்டுபிடித்துள்ளார். மேலும், கிளின்டன் ஹெல்த் ஆக்சிஸ் இனிஷியேடிவ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். மலேரியா, டியூபர்குளோஸிஸ் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க இவர் நிதி திரட்டி உள்ளார்.

இதற்கு முன்னதாக, அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரஸ் அதானம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...இன்று நாடு தழுவிய முழு அடைப்பு; 18 கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

Last Updated : Dec 8, 2020, 9:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details