கரோனாவுக்கு எதிரான போரில் போர் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் களமாடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா நோயாளிகளுக்காக போராடும் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ப்ரீத்தி சுப்பிரமணியை அமெரிக்க அரசு கௌரவித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய மருத்துவரை கவுரவித்த அமெரிக்கா அதில், சவுத் வின்ட்சர் (South Windsor) பகுதியில் உள்ள மருத்துவரின் வீட்டின் முன்பு, தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல வாகனங்கள் சைரனை ஒலித்தும், காரில் ஹாரன்களை ஒலிக்கசெய்தும் கௌரவித்தனர்.
மேலும், கரோனாவிலிருந்து மீண்ட மக்கள், காரில் அமர்ந்தபடியே பதாகைகள் மூலம் மருத்துவருக்கு நன்றி தெரிவித்தனர். இதை எதிர்ப்பார்க்காத ப்ரீத்தி நெகிழ்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க:ஆப்ரிக்காவைத் துரத்தும் கரோனா; பேரழிவைத் தருமா? - ஐ.நா. அச்சம்