2018ஏப்ரல் 6ஆம் தேதி கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஹாக்கி வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கனடாவில் விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம்! இந்திய ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறை - 8-years
ஒட்டாவா: கனடாவில் விபத்தில் 16 பேர் உயிரிழந்த வழக்கில் இந்திய ஓட்டுநருக்கு 8 ஆண்டு சிறை தண்டணை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரியை இயக்கிய ஜஸ்கிரத் சிங் சித்து என்ற இந்திய ஓட்டுநரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மெபோர்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றவந்தது.
இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி தீர்ப்புவழங்கினார். அதில், ஜஸ்கிரத் சிங் சித்து ஒளிரும் விளக்குகளை கவனிக்காமல் அலட்சியமாக வாகனம் இயக்கியது தெரியவந்துள்ளது. எனவே, இந்த விபத்துக்கு காரணமான ஜஸ்கிரத் சிங் சித்துவுக்கு எட்டுஆண்டுகள் சிறை தண்டணை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.