தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஓ.சி.ஐ. விசா விவகாரத்தில் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்' - அமைச்சர் உறுதி - ஓ.சி.ஐ. வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை விசா

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடியுரிமை விசா விவகராத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Murali
Murali

By

Published : May 18, 2020, 11:25 AM IST

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பின் காரணமாக முடங்கியுள்ளதன் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்துவருகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் விசா காலக்கெடு, அவர்களின் குடியேற்ற மனுக்கள் ஆகியவை தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், வளைகுடா நாடுகளில் சுமார் 80 லட்சம் இந்தியர்கள் வசித்துவரும் நிலையில், அவர்களில் பலர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களை நாடு கொண்டுவரும் முயற்சியிலும் இந்தியா களமிறங்கியுள்ளது.

இச்சூழலில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்புடன் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நீண்ட காலமாக சிக்கலில் இருக்கும் ஓ.ஐ.சி. விசா எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடியுரிமை விசாவில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு மாற்றம் கொண்டவரப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெரும்பலானோர் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:பொறுப்பில் இருப்பதுபோல நடிக்கக்கூடத் தெரிவதில்லை - ட்ரம்பை தாக்கும் ஒபாமா

ABOUT THE AUTHOR

...view details