தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஜனநாயகத்திற்கு இந்திய தேர்தல் உத்வேகம் அளித்துள்ளது' - அமெரிக்கா! - elections

வாஷிங்டன்: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, உலகிலுள்ள ஜனநாயகத்திற்கு இந்திய தேர்தல் உத்வேகம் அளித்துள்ளது என்று புகழ்ந்துள்ளது.

அமெரிக்கா

By

Published : May 25, 2019, 7:51 AM IST

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது.

இந்நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு , " உலகிலுள்ள ஜனநாயகத்திற்கு இந்திய தேர்தல் உத்வேகம் அளித்துள்ளது. இந்தத் தேர்தலில் பங்கேற்ற இந்திய மக்களுக்கும், அரசுக்கும் எங்களது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். பொருளாதாரம், பயங்கரவாதம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து புதிய அரசுடன் இணைந்து செயல்பட உள்ளோம் " என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details