தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் இருந்து மருந்துகளை திரும்பப் பெறும் இந்திய நிறுவனங்கள்! - அமெரிக்க செய்திகள்

டெல்லி: அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து தங்கள் மருந்துகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

Indian drug firms
Indian drug firms

By

Published : Nov 15, 2020, 7:32 PM IST

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் பெரும்பாலான மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுபவை. அதன்படி, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் குறித்து அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், N-Nitrosodimethylamine என்ற வேதிப்பொருளின் தூய்மை அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தங்கள் மருந்துகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி மார்க்சன்ஸ் பார்மா, ஜைடஸ் பார்மாசூட்டிகல்ஸ், அரவிந்தோ பார்மா (அமெரிக்கா) உள்ளிட்ட மருந்துகள் தங்கள் மருந்துகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிங்க:'2021ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும்'

ABOUT THE AUTHOR

...view details