அமெரிக்க - இந்திய வர்த்தக கல்வி நிறுவனம் சார்பில், 'இந்தியா ஐடியாஸ்' உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அமெரிக்கா சார்பில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 'உலக நாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையில், இந்தியா, அமெரிக்க போன்ற ஜனநாயக சக்திகள் அதை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
சர்வதேச வர்த்தகச் சங்கிலியில், சீனாவின் இடத்தை நிரப்ப இந்தியாவால் முடியும். குறிப்பாக, தொலைத்தொடர்பு, மருத்துகள் விற்பனை உள்ளிட்ட துறைகளில், இந்தியாவின் வர்த்தகத் திறன் சிறப்பாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் நன்மதிப்பை இந்தியா பெற்றுள்ளது.