தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் இந்தியக் கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு! - அமெரிக்க வாழ் இந்தியர்கள்

வாஷிங்கடன்: அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Indian Americans celebrates Republic Day
Indian Americans celebrates Republic Day

By

Published : Jan 27, 2020, 5:14 PM IST

இந்தியாவின் 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதேபோல, அமெரிக்க வாழ் இந்தியர்களால் வாஷிங்டனில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது திடீரென்று சில காலிஸ்தான் போராளிகள், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் அரசியலமைப்பையும் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வாழ் இந்தியர் கூறுகையில், "எங்களின் தேசப்பற்றை யாராலும் குறைக்க முடியாது. காலிஸ்தானை ஆதரிப்பவர்கள் எல்லாம் போலியான சீக்கியர்கள். உண்மையான சீக்கியர்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆனால் காலிஸ்தான் என்பது பாகிஸ்தானால் நிகழ்த்தப்படும் அரசியல் விளையாட்டு" என்றார்.

அமெரிக்காவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது எதிர்ப்பு கோஷத்தால் பரபரப்பு

அமெரிக்க சட்டப்படி எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்புவது குற்றமல்ல என்பதால், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கையாகவுள்ளது.

இதையும் படிங்க: மூவர்ண நிறங்களால் மின்னிய புர்ஜ் கலிஃபா

ABOUT THE AUTHOR

...view details