தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிக்கு உலக உணவு பரிசு! - ரதன் லாலுக்கு, 2020ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு

வாஷிங்டன்: இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானி ரதன் லாலுக்கு, 2020ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு கிடைத்துள்ளது.

food
food

By

Published : Jun 13, 2020, 1:00 PM IST

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ரதன் லால், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, பருவநிலை மாற்றங்களையும் எதிர்கொண்டு, உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான மண்வளத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வளர்த்து, பிரதானமாக முன்னெடுத்துச் சென்றதற்காக 2020ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக்கேல் பாம்பியோ கூறுகையில், "மேம்பட்ட மேலாண்மை, குறைந்த மண் சரிவு, ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்வதன்மூலம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களுக்கு உதவியுள்ளார்.

இவரின் திறமையைப் பாராட்டி பரிசாக இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்துவருகிறது. எனவே அனைவருக்கும் போதுமான உணவு இருப்பதை உறுதிசெய்வதற்காக நம்மிடம் உள்ள வளங்களை உற்பத்தி திறனுக்கு சரியாகப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

டாக்டர் லால் 2020 உலக உணவுப் பரிசைப் பெறுவதில் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர், "ஆரோக்கியமான மண்ணிலும் சுத்தமான சூழலிலும் வளர்ந்த சத்தான உணவுகள் போதுமான அளவிற்கு ஒவ்வொரு நபருக்கும் கிடைக்க‌ வேண்டும். தற்சமயத்திற்கு தேவையான உணவை அவசரமாக வழங்குவது மனிதகுலத்தை மேம்படுத்தாதாது" என்றார்

இவர், ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் மண்வள அறிவியல் பிரிவின் பேராசிரியராகவும், கார்பன் மேலாண்மை, சேமிப்பு மையத்தின் நிறுவன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details