தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜி-7 உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் - இந்திய தூதர் உறுதி - அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்தியா தூதர் தரஞ்சித் சிங் சந்து தெவிரித்துள்ளார்.

Taranjit Singh Sandhu
Taranjit Singh Sandhu

By

Published : Jun 9, 2020, 8:41 PM IST

அமெரிக்கா அதிபர் ட்ரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடியது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, "இருவரும் வழக்கமாகவே தொடர்பில் இருப்பார்கள். இந்தியா - அமெரிக்கா உயர் அலுவலர்களும் அவ்வப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.

ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற உரையாடலில் மற்ற விஷயங்களுடன் ஜி-7 மாநாடு குறித்தும் பேசப்பட்டது. அமெரிக்காவில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.

ஜி-7ஐ விரிவாக்கம் செய்வது குறித்த தனது விருப்பத்தையும் ட்ரம்ப் பகிர்ந்துகொண்டார். இதன் காரணமாக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியாவுக்கு மகிழ்ச்சி. இருப்பினும் ஜி-7 மாநாடு நடைபெறும் தேதி இன்னும் உறுதியாகவில்லை" என்றார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், சீனாவுக்கு எதிராக செயல்பட நினைத்தால் அது வெற்றி பெறாது என்றும் காட்டமாக விமர்சித்திருந்தது.

இது குறித்து பேசிய தரஞ்சித் சிங், "ஜி-7 உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்பது இது முதல்முறை அல்ல. அதுவும் இந்த கரோனா காலத்தில் நமது மதிப்பும் உயர்ந்துள்ளது. எனவே, 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் இருப்பு என்பது ஜி-7 மட்டுமல்ல, அனைத்து கூட்டமைப்புகளிலும் தேவையானது மட்டுமல்ல, அவசியமானது" என்றார்.

மேலும், உலகிலேயே அதிகப்படியான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருப்பதால், மருந்துகளை உற்பத்தி செய்ய அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமதிப்பான செயல் -அதிபர் ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details