உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதுவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு மருந்து நிறுவனங்களால் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பேசுகையில், ''கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க இந்தியா-அமெரிக்கா நாடுகளின் மருந்து நிறுவனங்கள் கைகோத்துள்ளன.
ஐ.சி.எம்.ஈ.ஆர். (ICMER) மற்றும் சி.டி.சி. (CDC) ஆகியவை இணைந்து கரோனாவுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியின் மூலம் குறைந்தது மூன்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும். இரு நாடுகளும் மருத்துவ ஆராய்ச்சியில் பல வருடங்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.