நியூயார்க்(அமெரிக்கா):ஐநா மன்றத்தில் பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா விளாசியுள்ளது.
முன்னதாக, இக்கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் பிரச்னை குறித்தும், பிரிவினைவாத தலைவர் கிலானி குறித்தும் பாகிஸ்தான் பேசியது. இதற்கு பதலிளிக்கும் வகையில் பேசிய ஐநா மன்றத்தின் இந்திய முதல் செயலாளர் சினேகா துபே, "ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் இரண்டும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிகளாக இருந்தது, இனியும் இருக்கும்" என்றார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிற்கு எதிராக தீங்கிழைக்கும் பரப்புரைகளை பாகிஸ்தான் மேற்கொள்வது இது முதல் முறையல்ல என்றும், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ள நிலையில் அதை திசைதிருப்ப இதுபோன்ற பரப்புரைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.