இந்திய சுற்றுப் பயணத்ததை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைநகர் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்திய சுற்றுப்பயணத்தின் போது இருதரப்பு உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். அவர் (பிரதமர் நரேந்திர மோடி) நல்ல மனிதர். சிறப்பான தலைவரும்கூட. இந்தியா ஒரு வியத்தகு நாடு" என்றார்.