வாஷிங்டன்: 1990-களிலிருந்து இந்தியாவின் வறுமை நிலையின் குறியீடு, ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கீடு செய்து பார்க்கையில், இந்தியா வறுமை நிலையில் ஏழு விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இது 15 ஆண்டின் சராசரி அளவை பொறுத்தமட்டில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சியானது மனித மேம்பாட்டில் இந்தியா வலுவான முன்னேற்றங்களைக் கண்டதினால் நிகழ்ந்துள்ளது என உலக வங்கி விளக்கியுள்ளது.