தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐநா அமைதிப்படை உறுப்பினர்கள் மீது தாக்குதல் - இந்தியா தூதர் கண்டனம்!

நியூயார்க்: ஐநா அமைதிப்படை உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதற்கு ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்
நியூயார்க்

By

Published : Jan 17, 2021, 12:55 PM IST

ஜனவரி 15ஆம் தேதி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் எகிப்து நாட்டை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். அதே நாளில், மாலி பகுதியில் ஐநா அமைதிப்படையின் வாகனம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "வலியை நாங்கள் பகிர்ந்துக்கொள்கிறோம். கொல்லப்பட்ட உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், எகிப்து மற்றும் புருண்டி (Burundi) அரசாங்கங்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். ஐநா அமைதிப்படையினருக்கு எதிரான தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ், "இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details