தமிழ்நாடு

tamil nadu

இந்தியா - கேரிகோம் இடையேயான முதல் சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி!

நியூயார்க்: இந்தியா - கேரிகோம் (கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை) இடையே முதல்முறையாக நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

By

Published : Sep 26, 2019, 8:17 AM IST

Published : Sep 26, 2019, 8:17 AM IST

India-CARICOM firstever meet

74ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா - கேரிகோம்(கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை) இடையே முதல்முறையாக நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது குறித்தும், இந்தியா-கேரிகாம் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார். காலநிலை குறித்து விவாதிக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியா- கேரிகோம் இடையேயான முதல் சந்திப்பில் பங்கேற்ற மோடி!

இந்த உச்சிமாநாட்டில், ஆன்டிகுவா & பார்புடா, பார்படாஸ், பெலிஸ், டொமினிகா, கிரெனடா, கயானா, ஹைட்டி, ஜமைக்கா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் பார்க்க : #SwachhBharat இந்த விருது 130 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது - மோடி

ABOUT THE AUTHOR

...view details