தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவை வீழ்த்த இந்தியா-அமெரிக்கா கூட்டணி - சீனாவை வீழ்த்த இந்திய - அமெரிக்க கூட்டணி

வாஷிங்டன் : இந்திய - அமெரிக்க நாடுகளின் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் முப்படைகளின் துணைத் தளபதி சத்திந்தர் கே.சைனி, அமெரிக்காவின் முப்படை தலைமைத் தளபதி (இந்தோ பசிபிக் பிராந்தியம்) ரொனால்டு பி. கிளார்க்கை சந்தித்துப் பேசினார்.

மோடி ட்ரம்ப்
மோடி ட்ரம்ப்

By

Published : Oct 20, 2020, 12:27 PM IST

Updated : Oct 20, 2020, 1:31 PM IST

ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே, கல்வான் மோதல் காரணமாக இந்திய - சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய-அமெரிக்க நாடுகளின் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் முப்படைகளின் துணைத் தளபதி சத்திந்தர் கே.சைனி, அமெரிக்காவின் முப்படை தலைமைத் தளபதி (இந்தோ பசிபிக் பிராந்தியம்) ரொனால்டு பி. கிளார்க்கை சந்தித்து பேசினார்.

இது குறித்து கிளார்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க, இந்திய நாடுகளுக்கிடையேயான கூட்டணி குறித்து ஆலோசிக்க முப்படைகளின் துணை தளபதி சத்திந்தர் கே. சைனி, அமெரிக்காவின் முப்படை தலைமைத் தளபதி ரொனால்டு பி. கிளார்க்கை சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில், (அக்டோபர் 17 முதல் 20 வரை) மூன்று நாள் பயணமாக சைனி அமெரிக்கா சென்றுள்ளார். சுதந்திரம், அமைதி, வளம் நிறைந்த அனைவருக்குமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை கட்டமைக்கும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீங்க கொஞ்சம் 'ஷட்அப்' பண்ணுங்க - அதிபர் தேர்தல் விவாதத்தில் புதிய விதி

Last Updated : Oct 20, 2020, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details