உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டுவருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையைச் சேர்ந்த 193 உறுப்பு நாடுகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டுவந்தது.
இதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்த நிலையில், இந்தியா, சீனா, ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. ஏற்கனவே, அன்மையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவுக் காரணம் காட்டி ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. அதேவேளை, போரை உடனடியாக கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான இந்திய தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.