இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சாத்தியமில்லை என்று முன்னாள் தூதர் நிஷா பிஸ்வால் கருதுகிறார். ஒபாமா நிர்வாகத்தில் பிஸ்வால் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவி வெளியுறவு செயலாளராக இருந்தவர். வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடன் பேசிய பிஸ்வால், டொனால்ட் டிரம்பின் எச்1பி, எல்1 விசாக்களை இடைநிறுத்தியதையும், எஃப் 1 விசாக்களில் உள்ள சர்வதேச மாணவர்களை முழு செமஸ்டருக்கும் அவர்களது கல்லூரி ஆன்லைனில் பாடம் நடத்தினால் அவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதையும் விமர்சித்தார். அமெரிக்க இந்தியா வர்த்தக கவுன்சிலின் தலைவராக இருக்கும் பிஸ்வால், வேலை இழப்புகள் இருக்கும்போது உள்விவகாரங்களில் கவனம் செலுத்துவது அல்லது புலம்பெயர்ந்தோரைத் குறிவைப்பது போன்றவை அமெரிக்க சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பாதகமானது என்று வாதிட்டார். இந்த பிரத்யேக உரையாடலில், இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்வதற்கான கூகுளின் முடிவைப் பற்றி கேட்டபோது, கோவிட் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் தான் எதிர்காலம் என்றும், இந்தோ-அமெரிக்க வர்த்தகம் அடுத்த பல ஆண்டுகளில் விரிவடைவதற்கு இந்தியாவில் நிலையான கொள்கை கட்டமைப்புகள் தேவைப்படும் என்றும் பிஸ்வால் சுட்டிக் காட்டினார். உரையாடலின் தமிழாக்கம் இதோ.
கே- இந்தோ-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று நினைக்கிறீர்களா?
மினி வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்தில் USTRஉள்ள தூதர் லைட்ஹைசர் மற்றும் அவரது குழுவினருக்கும் வர்த்தக அமைச்சகத்தின் பியூஷ் கோயலுக்கும் அவரது குழுவினருக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் அந்த பிரச்சினைகள் தள்ளி வைக்கப்படுமா என்று பார்க்கிறார்கள். தேர்தல் எவ்வளவு நெருக்கமாக வருகிறதோ, அதற்கு முன்பு நீங்கள் ஏதேனும் சிலவற்றை மட்டுமே பெற முடியும், ஆனால் அதற்கு முன்பு அவர்களால் அதைச் செய்ய முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுவேன். மினி ஒப்பந்தத்தை விரைவில் செய்து முடிப்பது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலனுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
கே- அமெரிக்க-சீனா வர்த்தக துண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டு எல்லைகோடு பகுதியில் இந்தியா-சீனா பதட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே இந்தோ-அமெரிக்க வர்த்தகத்திற்கான வாய்ப்பு பகுதிகள் யாவை?
அத்தியாவசிய மருந்துகள், பாதுகாப்பு, உயர் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற முக்கிய பகுதிகளில் இந்தியாவில் விநியோகச் சங்கிலி மற்றும் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் நமது பொருளாதார கூட்டணியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்தத் தொழில்களைக் கட்டமைப்பதில் நம்பகமான கூட்டாளியை நாங்கள் எதிர்பார்க்கும் பகுதிகள் அவை. சீனா எப்போதுமே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளியாக இருக்கும், அதை மாற்றவோ குறைத்து மதிப்பிடவோ யாரும் முயற்சிக்கவில்லை.
ஆனால் விநியோகச் சங்கிலிகளில் அதிக பன்முகத்தன்மை மற்றும் சில துறைகளில் ஆபத்து ஏற்படுவது போன்றவற்றில் நிலையான, கவர்ச்சிகரமான மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் கொள்கை கட்டமைப்பைக் உருவாக்க வேண்டும். குறுகிய காலத்தில் நிறுவனங்கள் தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் நிறைய நட்டங்களை எதிர்கொள்கின்றன என்பதனை பற்றிய ஆதங்கம் இது. நீங்கள் பெரிய முதலீடுகளைச் செய்ய உகந்த நேரம் இதுவல்ல. அடுத்த பல ஆண்டுகளில் அமெரிக்க-இந்தியா பொருளாதார வழித்தடத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய முயற்சிப்பது பற்றி நாங்கள் பேசுகிறோம்
கே- கல்வான் மோதல்களுக்குப் பிறகு, சில சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை இந்திய அறிவித்ததால், துறைமுகங்களில் குழப்பத்திற்கு வழிவகுத்தது. அமெரிக்க-இந்தியா உத்திசார் கூட்டமைப்பு USISPF இது அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறியுள்ளது. இதனை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
இவை மிகவும் சிக்கலானது மற்றும் நுணுக்கமானது. இந்திய அரசாங்கம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தேசம், குடிமக்கள் மற்றும் இந்திய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் தேவையை நாங்கள் பாராட்டுகிறோம், ஆதரிக்கிறோம்.ஆனால், நாம் மிகவும் ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தில் வாழ்கிறோம், எனவே வேண்டுமென்றே செயல்படுவதனால் சந்திக்ககூடிய எதிர்பாராத சில விளைவுகளை பற்றி சிந்திப்பதும் முக்கியம்.
கே- கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்த உதவும் புதிய 10 பில்லியன் டாலர் டிஜிட்டல் மயமாக்கல் நிதியை அறிவித்துள்ளார். மேலும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் இதில் நுழையும் என நீங்கள் நினைக்கிறீர்களா?