அமெரிக்க அதிபர் யார் என்பதில், ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அதில், மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்ற நிலையில் மற்ற 8 மாகாணங்களில் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பிடன் கூறுகையில், "நான் வெற்றியை அறிவிக்க இங்கு வரவில்லை. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், நாங்கள்தான் வெற்றியாளர்களாக இருப்போம் என்று நம்புகிறோம். நான் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று ஆட்சி செய்கையில், சிவப்பு மற்றும் நீல மாகாணங்கள் என்ற பிரிவினை இருக்காது. அமெரிக்கா மட்டுமே இடம்பெற்றிருக்கும்" எனத் தெரிவித்தார்.