அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் தங்கி இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ரூத் ஜார்ஜ் (19). இவர் தனதுகல்லூரியின் கார் பார்க்கிங் வளாகத்தில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் வசிக்கும் டொனால்ட் தர்மன் என்பவர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அவரின் உடலை அப்பகுதியில் வீசிச் சென்றதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கொலை செய்தது மட்டுமின்றி அப்பெண்ணின் செல்ஃபோனையும் அந்நபர் திருடிச்சென்றுள்ளார்.