மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் வெப்பமண்டல தாழ்வு நிலையின் காரணமாக பலத்த மழை மற்றும் புயல் உருவாகியது. இதனால் 42 ஆறுகள், நீரோடைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, பாலங்களையும் அணைகளையும் சேதப்படுத்தின. இதனால் டெகுசிகல்பா உள்ளிட்ட மற்றொரு நகரமும் மிகுந்த பாதிப்பினைச் சந்தித்தது.
இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 750 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டன. புயல் மற்றும் சூறாவளி காரணமாக 31 முக்கிய சாலைகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.