தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹவுடி மோடி!: ட்ரம்ப்புடன் கரம்கோர்த்த மோடி...! - ஆர்ப்பரித்த மக்கள் - ஹவுடி மோடி

வாஷிங்டன்: ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் மக்களின் ஆரவாரத்துக்கிடையே பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கரம்கோர்த்து கையை அசைத்தவாறு நிகழ்ச்சி உள்ளரங்கை சுற்றிவந்தனர்.

modi

By

Published : Sep 23, 2019, 9:54 AM IST

Updated : Sep 23, 2019, 10:25 AM IST

அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு ஏழுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் உரையாற்றினர்.

பின்னர், இந்நிகழ்ச்சியின் முடிவில் மேடையைவிட்டு கீழே இறங்கிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கையைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சி பொங்கும் சிரிப்புடன், கையை அசைத்தவாறு அந்த உள்ளரங்கை சுற்றிவந்தார். அதற்கேற்றார்போல் கூட்டத்தை நோக்கி அதிபர் ட்ரம்ப்பும் கையை அசைத்தார்.

இதனைக் கண்டதும் அங்குக் கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். கூச்சலுக்குப் பின்னணியில் மேளதாளங்கள் முழங்க நிகழ்ச்சி திருவிழாக்கோலம் பூண்டது.

Last Updated : Sep 23, 2019, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details