ஹூடன் வாய்ப்பு
ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹவுஸ்டன் நகரில் நாளை நடைபெறவிருக்கும் 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் உரையாற்றவுள்ளார். அவருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பானது கறை படிந்த, இந்தியா - அமெரிக்க வர்த்தக உறவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் சந்திப்பாக அமையலாம். கடந்த சில ஆண்டுகளில் இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்திடாத பிரகாசமான வாய்ப்பது இதுதான்.
ஞாயிறு அன்று என்ன அறிவெறிப்பு வெளியாகும் எனத்தெரியவில்லை. ஆனால், இந்தியாவுடனான 30 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.1 லட்சம் கோடி) வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் தான் ஆலோசிக்கப்போவதாக ட்ரம்ப் கூறிப்பிருப்பது இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
2017-18ஆம் ஆண்டில், இந்தியாவுக்குள் அமெரிக்கா செய்த இறக்குமதியை விட பலமடங்கு ஏற்றுமதி அதிகம். (ஏற்றுமதி : சுமார் ரூ. 3.4 லட்சம் கோடி, இறக்குமதி ரூ. 1.9 லட்சம் கோடி). இருதரப்பினருக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த திங்கட்கிழமை அறிவித்தார். இந்த அறிவிப்பானது மோடி-ட்ரம்ப் சந்திப்பின் போது வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
வர்த்தக உறவை சீர்செய்துகொள்ள இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம். ஆனால், ஒருவரிடமிருந்து இன்னொருவர் முடிந்த அளவுக்கு அதிவு லாபத்தை ஈட்டவே முற்படும் சிக்கல் உள்ளதால், கையெழுத்தாகும் ஒப்பந்தத்தில் இருநாடுகளும் நழுவாது இருந்தாலே ஆச்சரியம் தான்.
வர்த்தக முன்னுரிமையை மீட்டெடுத்தல் :
அமெரிக்காவின் உள்நாட்டு வணிகத்தையும், வேலைவாய்ப்பையும் பாதுகாக்க அதீத அக்கறை செலுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் 'அதிக வரி' குறித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.