தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹைதி அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை - உலகச் செய்திகள்

ஹைதி நாட்டின் அதிபர் ஜொவினெல் மோஸ் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜோவ்நெல் மோய்ஸ்
ஜோவ்நெல் மோய்ஸ்

By

Published : Jul 7, 2021, 8:07 PM IST

ஹைதி நாட்டின் அதிபர் ஜொவினெல் மோஸ் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் க்ளாட் ஜோசப் அறிவித்துள்ளார்.

செவ்வாய் நள்ளிரவு(ஜூலை 6) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் சிக்கிய மோஸின் மனைவி மார்டின் மோஸிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படுகொலை சம்பவம் மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டனம் தெரிவித்த இடைகால பிரதமர் ஜோசப், இச்சம்பவம் குறித்து ஹைதி காவல்துறை விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இயற்கைப் பேரிடர் காரணமாக, அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை இன்றித் தவித்துவரும் ஹைதி அரசுக்கு, இந்த படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் லாம்டா கரோனா பரவல்? - நிபுணர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details