தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஷின்சோ அபே உடனான பேச்சவவார்த்தை சிறப்பாக அமைந்தது - ட்ரம்ப்! - Trump

வாஷிங்டன்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடனான வட கொரியா விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை சிறந்த முறையில் அமைந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஷின்சோ அபே உடனான பேச்சவவார்த்தை சிறப்பாக அமைந்தது - ட்ரம்ப்!

By

Published : May 7, 2019, 8:26 AM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வட கொரியாவின் விவகாரம், பொருளாதாரம் ஆகியவை குறித்து ஷின்சோ அபே-விடம் பேசினேன். இந்த பேச்சுவார்த்தை சிறந்த முறையில் அமைந்தது" என பதிவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக வெள்ள மாளிகை தரப்பில் தெரிவிக்கையில், "இரு நாட்டு தலைவர்களும் வட கொரியாவின் தற்போதைய வளர்ச்சி, அணு ஆயுத சோதனையை அந்நாடு முழுமையாக கைவிடுவதற்கு, அமெரிக்கா - ஜப்பானின் ஒற்றுமையான நடவடிக்கை குறித்தும் விவாதித்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா அதிபரிடம் ஷின்சோ அபே மனம் திறந்து பேச வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 4ஆம் தேதி சிறிய தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை வட கொரியா நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details